மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் - தமிழக அரசு

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறி உள்ளது.

Update: 2021-08-31 12:25 GMT
மதுரை

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ல  நிலையில், பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறி உள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், பள்ளிகள் திறப்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறப்பது  குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தது.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும், இணையவழியில் பாடங்கள், வகுப்புகள் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்