அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு முடித்துவைப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு முடித்துவைப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவு.

Update: 2021-09-08 21:18 GMT
சென்னை,

தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தவிர மேலும் 2 மோசடி வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டன.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மீதான மோசடி வழக்கை அண்மையில் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இந்த வழக்கு விசாரணை, சிறப்பு கோர்ட்டு நீதிபதி என்.ஆலிசியா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை ரத்துசெய்து ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்துகொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்