தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெவித்துள்ளார்.

Update: 2021-09-09 20:00 GMT



சென்னை,

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி என்பவரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  ரவி, நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார்.

ரவீந்திர நாராயண ரவி என்ற முழு பெயரை கொண்ட அவர், பீகாரில் பிறந்தவர்.  கடந்த 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கிய அவர், மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.  இந்த சூழலில், பன்வாரிலால் புரோகித்துக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!

தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!  தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்