காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவு; முதல்-அமைச்சர் அறிவிப்பு

காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவாகி உள்ளன என முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2021-09-10 00:13 GMT


சென்னை,


சட்டப்பேரவையில் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறும்போது, இணையவழி புகார் செய்யும் வசதி வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால், தற்போது குடிமக்கள் இணையவழி வாயிலாக புகார்களை அனுப்பலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன், ஒரு ஒப்புகை எண் வழங்கப்படும்.

இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்த தமது இணையவழி புகாரின் நிலையை குடிமக்கள் இணையதளத்திலே அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புகார் பதிவு செய்யப்பட்டு, அதற்கான தீர்வு காணப்பட்டவுடன் புகார்தாரருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தான பின்னூட்டத்தையும் குடிமக்கள் கொடுக்கலாம். இதுவரை 1,60,507 இணையவழி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்