அ.தி.மு.க ஆட்சியில் 637 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்

Update: 2021-09-13 08:39 GMT
சென்னை

சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம்”  அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம்.

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக  உயர்த்தப்படும்.

கட்சி வேறுபாடில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன; அதில் 1,167 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டன, 637 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என கூறினார் .

மேலும் செய்திகள்