''தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது''- திருமாவளவன்

''தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-19 08:47 GMT
சென்னை,

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது  என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் இனி பாஜகவின் ஆட்சி தான் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திருமாவளவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னதாக, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும்  தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் அமரப்போவதை பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை”  எனவும் பேசியிருந்தார். 

மேலும் செய்திகள்