பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

Update: 2021-09-20 22:22 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான கூடுதல் வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தநிலையில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் இந்த அளவு விலை உயர்வு இருக்காது என்று சொல்லப்படுவது சரியானது அல்ல.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது என்பதால் அதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாகும்.

அவ்வாறு ரத்து செய்யும் வரை, பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதற்கு, அதன் மீது உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் கூடுதல் வரியை (செஸ்) ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்