தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பயில நடவடிக்கைகள்- அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வில் விலக்கு பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Update: 2021-09-21 10:57 GMT
சென்னை,
 
மாணவர்கள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார். சென்னை மந்தைவெளியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், 

“ நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மாணவர்கள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி தரப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்