“ ரெயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும்” - தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல்

ரெயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-06 17:21 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து விதமான பயணிகள் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், தற்போது பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. பல சோதனைகளுக்கு பிறகே பயணிகள் ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க, ரெயில் நிலைய நடைமேடை டிக்கெட் கட்டணத்தை தெற்கு ரெயில்வே (பிளாட் பார்ம் டிக்கெட்) ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தி வினியோகிக்கப்படுகிறது. இதையடுத்து ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததும் ரெயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 50.லிருந்து பழைய நிலைக்கு மாற்றப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்