கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.

Update: 2021-10-12 12:44 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜயதசமியன்று (வெள்ளிக்கிழமை) கோவில்களை திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்ட உள்ளது. 

விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

மேலும் செய்திகள்