விதிமீறல்: ரெயில்வே பயணிகளிடம் 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம்

கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் கடந்த 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Update: 2021-10-14 08:51 GMT

சென்னை,

நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  இந்த நிலையில், ரெயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து வெளியிடப்பட்டு உள்ளன.

அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரையிலான காலகட்டங்களில், பயணத்தின்போது கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.

இவற்றில் முக கவசம் அணியாததற்காக ரூ.1.63 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.


மேலும் செய்திகள்