பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் - வாகன ஓட்டிகள் கலக்கம்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-15 01:16 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வராலாறு காணாத உச்சத்தை தினம் தினம் எட்டி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.  பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.40-ஆகவும், டீசல் ரூ.98.26-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 14-வது முறையாக உயர்ந்துள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் பல மாநிலங்களில் ரூ.100-ஐ தாண்டி விட்டது. சென்னையிலும் விரைவில் ரூ.100-ஐ எட்டும் எனத் தெரிகிறது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்