தஞ்சையை கலக்கும் மார்டன் பெண் சாமியார்

மாடர்ன் பெண் சாமியார். தன்னை காளியின் அவதாரம் என சொல்லிக்கொண்டு பொதுமக்களுக்குஆசி வழங்கியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-15 13:09 GMT
பட்டுக்கோட்டை, 

பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அக்கினி காளியம்மன் கோவில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவிற்கு மாடர்ன் உடையில், கண் இமையிலும், உதடுகளிலும் சாயம் பூசி, கழுத்து நிறைய நகையும் ஹைஹீல்ஸ் செருப்பும் அணிந்து நேற்று பெண் சாமியார் வந்திருந்தார். 

தலைமுடியை வெள்ளை, செம்பட்டை நிறத்தில் கலரிங் செய்து இருந்த இவர் அகில இந்திய யுவமோட்சா தர்மாச்சாரியா பட்டம் பெற்றுள்ளதாகவும், தன்னுடைய பெயரை ஸ்ரீ பவித்ரா காளிமாதா எனவும் தெரிவித்தார்.

தன்னை சாமியார் என அழைக்கக்கூடாது எனவும், தான் காளி மாதா எனவும் சொல்லிக் கொண்டார். 

எம்.ஜி.ஆர்.அவருக்கு பெயர் சூட்டியதாகவும், ஜெயலலிதா, அவரை போயஸ் கார்டனில் அழைத்து பேசியதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அவரிடம் ஆசி பெற்ற பின்னர் தான் முதல்வர் ஆனதாகவும், எடியூரப்பா, அவரது மகன் இவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர் எனவும் அவரோடு வந்து இருந்தவர்கள் தெரிவித்தனர். 

மாடர்ன் பெண் சாமியார். தன்னை காளியின் அவதாரம் என சொல்லிக்கொண்டு பொதுமக்களுக்குஆசி வழங்கியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்