திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்.

Update: 2021-11-22 22:16 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. நேர்மையான அதிகாரி எனப்பெயர் பெற்றவர்.

இரவு காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களை பின்தொடர்ந்து, 15 கிலோ மீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது. அவரது உடல், உரிய சிறப்புகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித்தொகையை தமிழக அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.

குற்றத்தொடர்பு உடையவர்களை காவல்துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். ம.தி.மு.க.வின் சார்பில் பூமிநாதனுக்கு வீர வணக்கம். அவரை இழந்து வேதனையில் உழலும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்