வியாபாரிகள் குறித்து அவதூறு பேச்சு: பெண் கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய வேண்டும்

வியாபாரிகள் குறித்து அவதூறு பேச்சு: பெண் கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய வேண்டும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விக்கிரமராஜா புகார்.

Update: 2021-11-25 22:24 GMT
சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த வாரம் குன்றத்தூர் கிறிஸ்தவ ஆலயத்தில் பியூலா செல்வராணி என்பவர் வணிகர்களை ஆபாசமாக சித்தரித்தும், குறிப்பாக நாடார் இன துவேஷத்தை முன்னிலைப்படுத்தியும், கலவரத்தை தூண்டும் விதமாக ஆற்றிய உரை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடப்பட்டுள்ளது.

இக்கருத்து அடித்தட்டு உழைத்து முன்னேறும் வணிகர்களுக்கு எதிராகவும், உள்நோக்கத்துடன் சாதிய இனவெறியை தூண்டும் விதமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே போலீசார் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி இந்த கொடுஞ்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், இதுபோன்ற விஷமப் பிரசாரம் பரவவிடாமல் தடுத்திடவும் பியூலா செல்வராணி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து நீதியை நிலைநாட்டிட வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்