கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களுக்கே மதுபானம் விற்பனை: அமைச்சர் சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Update: 2021-11-29 00:21 GMT


சென்னை,

சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறும்போது, தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இதுவரை 77.33 சதவீதம் பேர் முதல் தவணை, 42 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுள்ளனர். பொதுவெளியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. இது மதுபான கூடங்களுக்கும் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.  எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மது வகைகள் விற்கப்படும். இதை கண்காணிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்