கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை ஒடுக்குவதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை ஒடுக்குவதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்.

Update: 2021-12-28 18:50 GMT
சென்னை,

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ‘மிஷினரி ஆப் சாரிட்டி’-க்கு எதிர்கால வெளிநாடு பங்களிப்புகளை மறுப்பதை விட, அதிர்ச்சியளிக்க கூடியது வேறு எதுவும் இல்லை. இந்தியாவில் ஏழைகள் மற்றும் ஏழ்மையானவர்களுக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த அன்னை தெரசாவின் தியாகத்துக்கு இது மிகப்பெரிய அவமானம் ஆகும்.

சில பாதகமான உள்ளீடுகளை கண்டறிந்ததாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. உள்துறை அமைச்சகம் தனது திறன்களை வகுப்புவாத வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, கிறிஸ்தவ தொண்டு மற்றும் மனிதாபிமான பணிகளை ஒடுக்க அல்ல.

2021-ம் ஆண்டு முடிவடையும்போது, மோடி அரசாங்கம் தனது பெரும்பான்மையான செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்கு கிறிஸ்தவர்களை மற்றொரு இலக்காக கண்டறிந்து உள்ளது தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்