தமிழகத்துக்கு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தேவையில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஏல பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் தமிழகத்துக்கு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தேவையில்லை மத்திய அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-01-04 18:59 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி பாசன பகுதியில் விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தையொட்டிய ஆழ்கடல் பகுதியில் 8,108 சதுர கி.மீ பரப்பளவிலான ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட மொத்தம் 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றில் தமிழகத்திற்கான திட்டம் தேவையற்றது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 7,264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ளன. அவற்றை செயல்படுத்த மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிதாக மேலும் திட்டம் தேவையில்லை. அத்திட்டம் ஆழ்கடலில் செயல்படுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் நிலப்பரப்பிலும் இருக்கும். அது காவிரி படுகையில் விவசாயத்தை பாதிக்கும். அதனால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பேசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்