தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம்

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-05 10:36 GMT
சென்னை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று  ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா பரவல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்குப் பின் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில்  தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல்  காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை

ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு. பொதுப்போக்குவரத்து இயங்காது, மெட்ரோ ரெயில், பஸ் போக்குவரத்துக்கு தடை 

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை முழுமையாக மூட உத்தரவு எனத் தகவல்.

அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கலாம்.

தொற்றைக் கட்டுப்படுத்த பேருந்து, புறநகர் ரெயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து 

அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆன் லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவு 

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடு 

* இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவிப்பு

* பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த  தடை 

* பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

* அரசு பணியாளர்கள் ஜன.9க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி சான்றிதழை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

* அனைத்து திரையரங்குகளும் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி  

* திரையரங்கு, கடைகள், வணிக வளாகங்களி பணிபுரிவோருக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்

*  அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல், கலை விழாக்கள் ஒத்திவைப்பு

* ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

* உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

* ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம்.

* வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை

* அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்

1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து 

10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும்.

* மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

மேலும் செய்திகள்