ஒமைக்ரான் அதிகமாக பரவுகிறது: கவனக்குறைவுடன் இருந்தால் பாதிப்பு பல மடங்கு உயரும்

ஒமைக்ரான் அதிகமாக பரவுகிறது: கவனக்குறைவுடன் இருந்தால் பாதிப்பு பல மடங்கு உயரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.

Update: 2022-01-05 21:01 GMT
சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டளையாக ஏற்று பின்பற்ற வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் போன்ற பகுதிகளில் தொற்று பாதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை அதிகம் இல்லை என பொதுமக்கள் கவனக்குறைவுடன் இருந்தால் இந்த பாதிப்பு பல மடங்கு உயரும். கல்லூரி மற்றும் விடுதிகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெருநகரங்களில் ஒமைக்ரான் மரபணு வைரஸ் பாதிப்பு தற்போது அதிகமாக பரவி வருகிறது. வருகிற 12-ந் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்