கடலூரில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

கடலூரில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

Update: 2022-01-10 05:32 GMT

கடலூர்:

தமிழகததில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

அந்த வகையில் கடலூரில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். அப்போது அவர், கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனால் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆனவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும், மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்