பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்

பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்.

Update: 2022-01-10 20:10 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருத்துவக்குடியை சேர்ந்தவர் கருப்பண்ண உடையார்(வயது 87). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாபநாசம் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். கருப்பண்ண உடையாருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்