‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடைசெய்ய தாமதம் கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மேலும் ஒரு இளைஞர் தற்கொலை: ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடைசெய்ய தாமதம் கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-01-10 22:04 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-

‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோயம்பேடு தினேஷ் கடந்த 5 மாதங்களில் ‘ஆன்லைன்’ சூதாட்டத்திற்கு பலியாகும் 12-வது உயிர். ‘ஆன்லைன்’ சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் தினமும் இத்தகைய தற்கொலைகள் நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் வாடிக்கையான ஒன்றாகி விடும்.

‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்