வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Update: 2022-01-18 00:33 GMT


சென்னை,
 


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 19ந்தேதி லேசான மழை பெய்யக்கூடும்.  தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.



மேலும் செய்திகள்