தமிழகத்தில் புதிதாக 26,981 பேருக்கு கொரோனா; 1.70 லட்சம் பேருக்கு சிகிச்சை..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-01-19 15:20 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 26 ஆயிரத்து 981 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,007 பேரும், கோவையில் 3,082 பேரும், செங்கல்பட்டில் 2,194 பேரும், கன்னியாகுமரியில் 1,008 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 70 ஆயிரத்து 661 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 35 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 073 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17 ஆயிரத்து 456 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 28 லட்சத்து 06 ஆயிரத்து 501 பேர் குணம் அடைந்து உள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்