தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை :சென்னை ஐகோர்ட்டு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-01-25 09:46 GMT
சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை தீவிரமாகி உள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த  சென்னை ஐகோர்ட்டு  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என  உத்தரவிட்டுள்ளது.


மேலும் தேர்தல் நடத்துவது தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது, தேர்தல் அறிவித்தால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று  மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள்ளது. 

தேர்தலை தள்ளிவைக்க  தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள்ளது. 

மேலும் செய்திகள்