கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு....!

கர்நாடகாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

Update: 2022-01-27 15:51 GMT
பெஙகளூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 38,083 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,92,496 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 20.44% ஆக அதிகரித்துளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,754 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 67,236 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,25,001 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 3,28,711 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்