மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பளித்து எல்லை மீறாமல் கவர்னர் செயல்பட வேண்டும்

மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பளித்து எல்லை மீறாமல் கவர்னர் செயல்பட வேண்டும் வைகோ வலியுறுத்தல்.

Update: 2022-01-27 18:53 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியரசு நாள் விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருந்த அறிக்கையை முழுமையாக ஆழமாக உள்வாங்கினால் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், அதற்கு பின்னணியில் இருந்து இயக்கி வரும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடித்திருப்பது தெரிய வரும்.அரசியலமைப்புச் சட்டத்தின்படி கவர்னர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். ஆனால் அவரின் வாழ்த்துச் செய்தி அந்த எல்லைகளை கட்டறுத்து தாண்டி இருப்பதை ஏற்க முடியாது. ‘நீட்' தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.மேலும், இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலையும் கவர்னர் வழங்கி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. கவர்னர் மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்