மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க விரைவில் பேட்டரி வாகனம் இயக்கம்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க "ஐகானிக்" திட்டத்தில் முதியோர்களுக்கு பேட்டரி வாகனம் இயக்கப்பட உள்ளது.;

Update:2022-04-04 11:00 IST
மாமல்லபுரம், 

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன்தபசு, பஞ்சரதம் பகுதிகளை முதியோர்கள், மாற்று திறனாளிகள் சுற்று பார்ப்பதற்கு வசதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் பேட்டரி வாகனம் இயக்க 2020ல் தொல்லியல்துறை முடிவு செய்தது.

மேலும் சர்வதேச சுற்றுலா "ஐகானிக்" நகரமாக மாமல்லபுரத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி "ரெனால்ட் நிசான்" கார் நிறுவனம் 8 பேர் பயணிக்க கூடிய 20 பேட்டரி வாகனங்களை வழங்க முன்வந்தது.

கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக அத்திட்ட செயல்பாடு நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் முதல்கட்டமாக கடற்கரை கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்கு 5 பேட்டரி வாகனங்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் இயக்கப்பட உள்ளது.

இந்த வாகனங்கள் சூரிய ஒளியால் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், பேட்டரியால் இயங்கக்கூடியது. இதை தயாரித்த பெங்களூர் நிறுவனம், தற்போது மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஓட்டிப்பார்த்து அதற்கான ஓட்டும் பயிற்சியும் கொடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்