தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்; 1 லட்சம் இடங்களில் நடக்கிறது

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2022-05-07 14:19 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு,  நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 

அந்தவகையில் 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டுக்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள், 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்