தமிழகத்துக்கு மழையா..? வெயிலா? - நெருங்கும் “அசானி" புயல்..!

அசானி புயலின் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-08 15:20 GMT
கோப்புப்படம்
சென்னை,

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் அசானி புயல்  அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தப் புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் மாறாக கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அசானி புயலின் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயலின் காரணமாக தமிழகத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த புயலானது, நிலப்பரப்பில் இருக்கக்கூடிய காற்றையும், ஈரப்பதத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. இதன் காரணமாக புயல் செல்லும் பகுதிகள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளை தவிர்த்து இந்திய அளவில் அதிகபட்ச வெப்பநிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒட்டுமொத்தமாக இந்த புயலானது தமிழகத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையை கொடுத்தாலும், அதற்கு பின்னர் தமிழகத்தில் வெயிலை தாக்கமே கடுமையான அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்