பப்ஜி மதன் ஜாமீன் மனு மீதான விசாரணை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பப்ஜி மதன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-11 10:29 GMT
கோப்புப் படம்
சென்னை,

ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசியபடி விளையாடியதாக வந்த புகாரின் பேரில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய போலீசாரு்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதன் மீதான வழக்கில் கூறப்பட்டுள்ள சில சட்டப்பிரிவுகள் இந்த வழக்குக்கு பொருந்தாது எனவும் கடந்த 10 மாதங்களாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்