எந்த தொழிற்சாலையையும் டெல்டாவில் கொண்டு வரமுடியாது - எடப்பாடி பழனிசாமி

டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையையும் கொண்டு வர முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2022-05-13 10:25 GMT
சேலம்,

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது கடந்த அதிமுக அரசு தான் என்றும் முதல் அமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கு தொழிற்சாலையை கொண்டு வர முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் மெய்யனூரில் இலவச தையல் பயிற்சி மையத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். 

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் நோக்கமே விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த தொழிற்சாலைகளோ, திட்டங்களோ டெல்டா பகுதிகளில் அனுமதிக்கக்கூடாது என்பதற்காகத்தான். 

டெல்டா பகுதிகளில் தொழிற்சாலைகள் வருவது போலவும் அதை தடுப்பது போலவும் திமுக அரசு ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. முதல் அமைச்சர் ஸ்டாலினே நினைத்தால் கூட டெல்டா பகுதிகளில் தொழிற்சாலைகளை கொண்டு வர முடியாது என்று கூறினார்.

மேலும் செய்திகள்