முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கம்
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.;
சென்னை,
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதுமான முழு பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 97,32,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ஐஆர்-க்கு பிறகு சென்னை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு;
ஆர்.கே.நகர் - 56,916
பெரம்பூர் - 97,345
கொளத்தூர் - 1,03,812
வில்லிவாக்கம் - 97,960
திரு.வி.க. நகர் - 59,043
எழும்பூர் - 74,858
ராயபுரம் - 51,711
துறைமுகம் - 69,824
சேப்பாக்கம் - 89,241
ஆயிரம் விளக்கு - 96,981
அண்ணாநகர் - 1,18,287
விருகம்பாக்கம் - 1,10,824
சைதாப்பேட்டை - 87,228
தியாகராயநகர் - 95,999
மயிலாப்பூர் - 87,668
வேளச்சேரி - 1,27,521