நெல்லை கோர்ட்டில் வழக்கறிஞர்கள் போராட்டம் - போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
இ-பைலிங் மையத்திற்கு பூட்டு போடச் சென்ற வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.;
நெல்லை,
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், இ-பைலிங் முறையை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கோர்ட்டில், மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர்கள் திரண்டு, கோர்ட்டு வளாகத்தில் உள்ள இ-பைலிங் மையத்திற்கு பூட்டு போடச் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.