சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2022-05-17 05:10 GMT
சென்னை,

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.4,771க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து, ரூ.65.40க்கு விற்கப்படுகிறது

மேலும் செய்திகள்