எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக நேற்று அறிவித்துள்ளார்.;
சென்னை,
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் உள்பட 18 பேரை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக நேற்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு ஓ,பன்னீர்செல்வம் அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.