2,600 டன் கோதுமை சரக்கு ரெயிலில் வந்தது
மராட்டியத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் கோதுமை சரக்கு ரெயிலில் வந்தது.;
மராட்டியத்தில் இருந்து நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு 2,600 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. 42 வேகன்களில் வந்திருந்த கோதுமை மூட்டைகள் அனைத்தும், 120 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணியில் இருக்கும் தனியார் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.