மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் வந்த 2,900 டன் கோதுமை

மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் ௨ ஆயிரத்து 900 டன் கோதுமை வந்தது.

Update: 2023-08-13 22:28 GMT

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேசத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,900 டன் கோதுமை 47 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கோதுமை மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றினார்கள். பிறகு சேமிப்பு கிடங்குகளுக்கு கோதுமை மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்