2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனி நகர் பகுதியில் நகராட்சி சார்பில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.;

Update:2022-07-19 20:50 IST

பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில், பழனி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி பஸ் நிலையம் முழுவதும் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 2-வது நாளாக  இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

நகராட்சி ஆணையர் கமலா தலைமையில், நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பழனியில் திண்டுக்கல் சாலை, பஸ் நிலையம் முன்பு, ரெயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், பேனர்கள் ஆகியவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்