சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

பொதுமக்கள் போராட்டம் எதிரொலியால் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-27 22:49 IST

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் கருவங்குடி பகுதியில் சாராயம் விற்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சாராய விற்பனை தொடர்ந்து நடந்து வந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெண்கள் உள்பட 3 பேர் கைது

இதனையடுத்து நீடூர் ஆற்றங்கரை தெருவில் சாராய விற்பனையில் ஈடுபட்ட கோவிந்தராஜ் மனைவி ராணி (வயது 65) என்பவரை மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல, அதே பகுதியில் சாராயம் விற்ற ஆரோக்கியராஜ் மனைவி மயிலம்மா (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாந்துகாப்பு தெருவில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மகன் ஆனந்தை(33) போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரிடமிருந்தும் தலா 110 லிட்டர் வீதம் 330 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்