மரநாயை வேட்டையாடிய 3 பேர் கைது

அச்சன்புதூர் பகுதியில் மரநாயை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;

Update:2023-08-27 01:48 IST

கடையநல்லூர்:

மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், வனக்காப்பாளர் செல்லத்துரை, வேட்டை தடுப்பு காவலர் முத்துமாணிக்கம் ஆகியோர் அச்சன்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெடுவயல் சிவகாமிபுரம் காலனியை ஒட்டிய ஓடைப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து மர நாயை வேட்டையாடி கறியை பங்கு போட்டு கொண்டிருந்த நெடுவயல் கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகன் மாடசாமி (25), செல்லையா (45), முருகன் மகன் மாரியப்பன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்