கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

அம்பையில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-19 19:06 GMT

அம்பை:

அம்பை- முக்கூடல் சாலையில் உள்ள முடபாலம் செல்லும் ரோட்டில் அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கவுதமபுரி தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் (வயது 23), மகேஷ் (24), தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த மைக்கேல் ராஜ் (25) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்த போது சட்டவிரோதமாக கஞ்சாவை அதிக விலைக்கு மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்