பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நங்கவரம் பேரூராட்சி அனஞ்சனூர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த பாலாஜி (வயது 26), ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (33), பெருகமணியை சேர்ந்த ராஜசேகர் (35) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.