342 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்கள் வினியோ கித்த 342 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.;

Update:2023-04-01 00:15 IST

கோவை

பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்கள் வினியோ கித்த 342 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

பதிவு சான்று

உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் 4-வது காலாண்டிற்கான ஆலோசனை குழு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் 92.8 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுள்ளனர். 90 சதவீதம் பேர் பதிவு சான்று பெற்று உள்ளனர். 904 பேர் உரிமமும், 3,222 பேர் பதிவு சான்றும் பெறா மல் உள்ளனர்.

எனவே உரிமம், பதிவு சான்று பெறாமலும், புதுப் பிக்காமலும் இயங்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு சான்று இன்றி உணவு வணிகம் செய்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி 6 மாத சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

சிறந்த பழங்கள் மார்க்கெட்

சுந்தராபுரம், வடவள்ளி உழவர் சந்தைகளுக்கு தூய்மையான காய்கறிகள் மற்றும் சிறந்த பழங்கள் மார்க்கெட்டுக்கான சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் உழவர் சந்தைகளுக்கு இந்த சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், கல்லூரி இணை இயக்குனர் ஆகி யோரின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் செயல்படும் கேன்டீன், விடுதி சமையல் கூடம் ஆகியவை உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் படி கட்டாயமாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு

கோவையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், உணவகங் கள், பேக்கரிகள், அங்கன்வாடி மையங்கள், இறைச்சி கடைகள் ஆகியவை பாதுகாப்பான உணவு வழங்குவது குறித்து தர நிர்ணய (ஹைஜினிக் ரேட்) சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் இதுவரை 454 நிறுவனங்கள் மட்டுமே பெற்றுள்ளன. மற்ற நிறுவனங்களும் இந்த சான்றிதழ் பெற வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார மான உணவு பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும் வகையில் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான திட்டத்தில் இதுவரை 5 பள்ளிகள் மட்டுமே இணைந்து உள்ளது. மீதமுள்ள பள்ளிகளும் இணைய வேண்டும்.

அபராதம்

ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத் தின் கீழ் இதுவரை 3 லட்சத்து 79 ஆயிரத்து 673 லிட்டர் சேகரிக் கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் வைத்து கொடுத்த 342 கடை உரிமையாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பொட்டல உணவு பொருட்களில் உள்ள லேபிளில் இதுவரை 356 குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அதுகுறித்து 112 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.9 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்