3½ கோடி பெண்கள் இலவச பஸ் பயணம்

தேனி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ், இதுவரை 3½ கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-01-31 19:00 GMT

இலவச பயண திட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தும் வகையில், சாதாரண கட்டண பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில், பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பஸ் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டது.

மேலும் இந்த திட்டத்தில் இலவச பஸ் பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவற்றுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டது. தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தை பெண்கள் சிறப்பான முறையின் பயன்படுத்தி வருகின்றனர்.

3½ லட்சம் பேர்

இத்திட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை தேனி மாவட்டத்தில் 3 கோடியே 51 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். அத்துடன், 3 லட்சத்து 81 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், 15,617 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள், 14,136 திருநங்கைகள் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்