4 பேர் கைது

மின் இறவை நீர் பாசன திட்ட கட்டிடத்தில் காப்பர் கம்பிகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-29 18:45 GMT

மின் இறவை நீர் பாசன திட்ட கட்டிடத்தில் காப்பர் கம்பிகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின் இறவை நீர் பாசன திட்டம்

முத்துப்பேட்டையை அடுத்த மேலதொண்டியக்காடு கிராமத்தில் அந்த பகுதி விவசாய நிலத்திற்கு பாசனத்தை பெற்று தரும் வகையில் வளவனாறில் மின் இறவை நீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை இயக்கும் மின் சாதனங்கள் உள்ள கட்டிடம் அதன் அருகே உள்ளது.

நேற்று முன்தினம் இந்த கட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மின் மோட்டாருக்கு செல்லும் காப்பர் கம்பிகள் மற்றும் இதர மின் சாதன பொருட்களை திருடினர். அதில் திருடி சென்ற சில பொருட்களை அங்கேயே மர்மநபர்கள் விட்டு சென்றனர். இதனால் மறுநாள் அந்த பொருட்களை எடுக்க சென்ற போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை பிடித்து முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

4 ேபர் கைது

இதுகுறித்து முத்துப்பேட்டை வெண்ணாறு வடிகால் பாசன உதவி செயற்பொறியாளர் அஜிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இடும்பாவனம் ஊராட்சி அடைஞ்சவிளாகம் கிராமத்தை சேர்ந்த நாகூரான் மகன்கள் சக்திவேல் (வயது25), விஜய் (20), மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ராஜா (53), அலிவலம் துவரமடை துர்கா நகரை சேர்ந்த ரஜினி (45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்