கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் அருகில் உள்ள கணுவாய் பாரதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி பிரியா. இவர்கள் கடந்த 23-ந் தேதி சாமி கும்பிடுவதற்காக திருப்பதி சென்றனர். பின்னர் 26-ந் தேதி வீட்டில் வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் வடவள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது20), அதே பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (22), அம்மன்குளம் கண்ணன் (23), வடவள்ளி எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்த மேத்யூஸ் (18) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டுப் போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.