மின் மோட்டார்கள் திருடிய 4 வாலிபர்கள் கைது

Update:2023-08-17 00:46 IST

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மல்லாக்கால் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 50). என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடையில் இருந்த 4 மோட்டார்கள் மற்றும் உபகரண பொருட்கள் திருட்டு போனதாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் எஸ்.நாட்டாமங்கலம் அருகே நடுக்காரடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் மணியனூரை சேர்ந்த சரண் (19), கரட்டூரை சேர்ந்த பூவரசன் (19), மணியனூரை சேர்ந்த ஆதி என்கின்ற ஆதித்தியா (19), நெத்திமேட்டை சேர்ந்த ராஜவேல் (19) என்பதும், அவர்கள் மோட்டார்கள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்