ரூ.43 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.43 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-18 19:56 GMT

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு தற்போது அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இங்கிருந்தும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பயணம் செய்யும் சில பயணிகள் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று தங்கத்தை கடத்தி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளிடம் வெளிநாடுகளில் இருந்து சிலர் தங்கத்தை கொடுத்து அனுப்ப, அதை கொண்டு வரும் தங்கத்திற்கு இந்திய விமான நிலையங்களில் சிலர் தரகர்களாக இருந்து சன்மானம் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல்

இந்நிலையில் நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிந்தோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தனர்

இதில் அவர் தனது உடலில் பசை வடிவில் உருளையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.42 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான 717 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்